முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

வெள்ளிக்கிழமை, 1 டிசம்பர் 2023      தமிழகம்
Udayanidhi 2021 12 12

Source: provided

சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், இளைஞர் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரோ, கூகுள் உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும், இதற்கு கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமே காரணம் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து