Idhayam Matrimony

ரஷ்ய ராணுவத்தில் மேலும் 1.7 லட்சம் வீரர்கள் சேர்ப்பு

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      உலகம்
Putin 2023-12-02

மாஸ்கோ, ரஷ்ய ஆயுதப் படையில் மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ரஷ்ய ராணுவத்தில் தற்போது 13 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே படைவீரர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ரஷ்ய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ரஷ்ய ஆயுதப்படைகளில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டுள்ளார் என்று கிரெம்ளின் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறும் போது சிறப்பு ராணுவ நடவடிக்கை மற்றும் நேட்டோவின் தற்போதைய விரிவாக்கம் ஆகியவற்றால்  நாட்டிற்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக ஆயுதப்படைகளின் வலிமையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்ப்பு நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து