முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்

சனிக்கிழமை, 2 டிசம்பர் 2023      தமிழகம்
KKSSR 2023 04 01

சென்னை, மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். 

இந்த நிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது. எந்தெந்தப் பகுதிகளில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்பகுதிக்கு மீட்புக் படைகளை அனுப்பி வைத்திருக்கிறோம்.

புயலால் சேதம் அடையும் மரங்கள், மின்கம்பங்களை விரைந்து அகற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேவையான இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரை ஐந்து மனித உயிரிழப்புகளும், 98 கால்நடைகளும் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பால் இதுவரை 420 குடிசை வீடுகள் பாதிப்படைந்துள்ளன. உயிர்பலி, குடிசைகள் சேதமடைந்தால் உடனடி நிவாரணம் வழங்கப்படும். பயிர்கள் சேதமடைந்தால் கணக்கெடுப்பு நடத்திதான் நிவாரணம் வழங்கப்படும். மண்டல அலுவலர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் களத்துக்குச் செல்ல முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து