எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
கடும் போட்டி...
இந்தியாவில் ஆண்டுக்கு ஒருமுறை ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரசிகர்களிடையே ஐ.பி.எல். மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், மிகப் பெரும் விளம்பர வருவாயை ஈட்டக்கூடியதாக அது உள்ளது. இதனால், ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்பு செய்வதற்கான உரிமம் பெறுவதில் ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
2-ம் இடத்தில்...
இந்நிலையில், 2043-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு 50 பில்லியன் டாலரைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக அருண் துமால் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐ.பி.எல். உரிம மதிப்பு 6.2 பில்லியன் டாலரை (ரூ.51 ஆயிரம் கோடி) தொடும் என்று மதிப்பிடப்படுகிறது. உலக அளவில், ஊடக உரிம மதிப்பின் அடிப்படையில் ஐ.பி.எல். 2-ம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் நேஷனல் புட்பால் லீக் (என்எஃப்எல்) உள்ளது. அதன் ஊடக உரிம மதிப்பு 110 பில்லியன் டாலர் (ரூ.9.13 லட்சம் கோடி) ஆகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


