முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல்: முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      இந்தியா
Vasundhara-Raje 2023-12-03

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் 53,193 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த நவம்பர் 25-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியமைக்க போவது உறுதியாகி உள்ளது. 

இதனிடையே பா.ஜ.க. வேட்பாளரும் ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே, ஜல்ராபட்டன் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ராம்லால் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகாசூட் ஆகியோரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

வசுந்தரா ராஜே 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் ராம்லாலை தோற்கடித்தார். 

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த வசுந்தரா ராஜே.. இது பிரதமர் மோடியின் வெற்றி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வியூகத்தால் வெற்றி கிடைத்தது. பா.ஜ.க. தொண்டர்கள் மற்றும் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.    

முன்னதாக 2013-ல், பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே ஜல்ராபட்டன் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 33.62 சதவீதம் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி சந்திராவத்தை 60,896 வாக்குகள் வித்தியாசத்தி தோற்கடித்து வெற்றி பெற்றார். 2008 தேர்தலிலும் பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜே இந்தத் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மோகன் லாலை 32,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

வாக்குகள் விவரம்: வசுந்தரா ராஜே (பா.ஜ.க.)- 1,38,831 ராம்லால் (காங்.) - 85,638, மகாசத் (பகுஜன் சமாஜ் கட்சி) - 3,431, பவன் குமார் மெஹர் (இந்திய மக்கள் பசுமை கட்சி) - 2,177. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து