முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜாம் புயல்: மின்தடை ஏற்படாத வகையில் பணிபுரிய மின்துறை தயார் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 டிசம்பர் 2023      தமிழகம்
Thangam 2023-12-03

Source: provided

திருவள்ளூர் : எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணிபுரிய மின் வாரியத்தின் ஊழியர்கள் எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறார்கள் என்று  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், துரைநல்லூர் 110 கி.வோ. துணை மின் நிலையத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று ஆய்வு செய்தார். 

அப்போது மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துக்களை தடுத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை பொறியாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களை  அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

பின்னர், அங்கு தயார் நிலையில் இருந்த களப்பணியாளர்களிடம் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் போது மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: 

இந்த புயலால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக மிக அதிகமான கன மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டமாக திருவள்ளுர் மாவட்டம் கருதப்படுவதால், கடலோரப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மின்வாரிய துறையின் அதிகாரிகளுக்கு அரசின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மின் வாரிய அதிகாரிகள் எல்லா இடத்திலும் தயார் நிலையில் இருக்கின்றனர். மின் தடை ஏதும் ஏற்படாமல் உடனடியாக சூழ்நிலையை சமாளிக்க கூடிய அளவுக்கு களப்பணியாளர்களையும் தளவாடப் பொருட்களையும் நாங்கள் இப்போது சேமித்து வைத்துள்ளோம். எந்த சூழ்நிலையும் சமாளிக்கக் கூடிய வகையில் தளவாடப் பொருட்களை கொண்டு செல்வதற்காக லாரி, ஜே.சி.பி மற்றும் கிரேன் போன்ற வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.

எல்லாவிதத்திலும், மின்தடை ஏற்படாத வகையிலும், அப்படி ஏதேனும் புயல் காற்றின் வேகத்தின் காரணமாக மின் தடை ஏற்பட்டாலும், உடனடியாக அந்த இடத்திலே பணிபுரிய மின் வாரியத்தின் ஊழியர்கள் எல்லா நிலையிலும் தயாராக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து