முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லூர் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜம் புயல் இன்று கரையை கடக்கிறது : சென்னை வானிலை மையம் தகவல்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
Weather-Center 1

Source: provided

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் இன்று ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையக் கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. 'மிக்ஜம்' எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு வடகிழக்கே சுமார் 80 கி.மீ. தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது. இந்தப் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆந்திரம் அருகே நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திருக்கும் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது., திருவள்ளூர் மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29 இடங்களில் அதிகனமழையும், 51 இடங்களில் மிக கனமழையும் பெய்ந்துள்ளது. மிக்ஜம் புயல் இன்று பிற்பகல் கரையை கடக்கும். வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று (டிச.,05) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை, பலத்த காற்று தொடரும். இன்று முற்பகல் ஆந்திராவின் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும். மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து