முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் மீண்டும் மோடி அரசு: பாராளுமன்றத்தில் பிரதமர் மோடிக்கு பா.ஜ., எம்.பி.க்கள் உற்சாக வரவேற்பு

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
Parliament 2023 05 27

புதுடில்லி, 3 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை பிடித்ததை அடுத்து, லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு, 3-வது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு'' என்ற கோஷம் எழுப்பி பா.ஜ., உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நேற்று (டிச.,4) துவங்கி, வரும் 22 வரை நடக்கிறது. முன்னதாக கூட்டத்தொடரில் பங்கேற்க லோக்சபாவுக்குள் நுழைந்த பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து கூறி, பா.ஜ., உறுப்பினர்கள் மூன்றாவது முறையாக மோடி அரசு, மீண்டும் மீண்டும் மோடி அரசு'' என்று கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை பிரதமர் மோடி புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக பார்லி., வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது., 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கும், நாட்டின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் இந்த வெற்றி ஊக்கமளிக்கிறது. இப்படியான சிறப்பான மக்களின் தீர்ப்புக்கு பிறகு, பார்லி., கூட்டத்தை சந்திக்கிறோம். கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். நீங்கள் (எதிர்க்கட்சிகள்) நாட்டுக்கு நேர்மறையான செய்தியை வழங்கினால் அது உங்களுக்கு நன்மை பயக்கும். எதிர்மறையையும், வெறுப்பையும் வெளிப்படுத்துவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து