முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்ஜம் புயலால் கனமழை: சென்னையில் பலி 5 ஆனது

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
MDS-1 2023-12-04

Source: provided

செனனை : சென்னையில் கனமழை, வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் பலியாகியுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலைமுதல் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில், கனமழைக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மின்சாரம் தாக்கி லோன் ஸ்கொயர் சாலையில் பத்மநாபன்(50), துரைப்பாக்கத்தில் கணேசன்(70) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். மரம் விழுந்ததில் பெசன்ட் நகரில் முருகன்(35) என்பவர் பலியானார். மேலும், பட்டினம்பாக்கத்தில் அடையாளம் தெரியாத ஒருவரும், புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய பகுதிகளிலும் அடையாளம் தெரியாத மற்றொருவரும் சாலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து