முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 7-ம் ஆண்டு நினைவு தினம்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலைக்கு மதுரை அ.தி.மு.க. சார்பில் மரியாதை : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அறிக்கை

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      தமிழகம்
Sellur-Raju

Source: provided

மதுரை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று மாநகர மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் மற்றும் கேகே நகரில் உள்ள ஜெயலலிதாவின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றும்  இன்று மாலை 5 மணி அளவில் மௌன ஊர்வலம் நடைபெறும் என்று மாணவர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்துஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க மதுரை மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் 7-ம் ஆண்டுநினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் அம்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. 

பின்னர் கே.கே.நகர் ஆர்ச் அருகே உள்ள அம்மாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதுபோல பல முதியோர் இல்லம், காப்பகங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பின்னர் மாலை 5 மணி அளவில் ஜான்சி ராணி பார்க்கிலிருந்து மேலமாசி வீதி வடக்கு மாசி வீதி சந்திப்பு வரை மௌன ஊர்வலம் நடைபெறுகிறது.

இந்த ஊர்வலத்தில் இந்நாள் முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட பகுதி வட்டக் கழக நிர்வாகிகள், இந்நாள், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், இந்நாள் முன்னாள் உள்ளாட்சி கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அனைத்து அணி நிர்வாகிகள் கழக முன்னோடிகள், தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து