எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல் அவிவ் : காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 15,523 ஆக உயர்ந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் கூறியதாவது, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனப் பகுதியில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,000-ஐ தாண்டியுள்ளது. காயமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் மிகக் குறைந்த மருத்துவ வசதிகளுடன் தரையில் சிகிச்சை பெற்று வருவதாக அல்-கித்ரா தெரிவித்தார்.
கடந்த அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தி, சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. காசா மீது இஸ்ரேல் கடுமையாகத் தாக்குதல் மேற்கொண்டு வந்த நிலையில், ஹமாஸிடம் உள்ள பிணைக் கைதிகளையும் இஸ்ரேலிடம் உள்ள பாலஸ்தீன கைதிகளையும் விடுவிக்க வசதியாக, ஒருவார காலம் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் போர் நிறுத்தத்தின்போது ஹமாஸிடம் இருந்த 105 பிணைக் கைதிகள், இஸ்ரேல் சிறைகளில் இருந்த 240 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில், காசாவை இஸ்ரேல் மீண்டும் கடுமையாகத் தாக்கி வருகிறது. வடக்கு காசாவில் தாக்குதலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல், தற்போது தெற்கு காசாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


