எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புனோம்பென் : கம்போடியா-வியட்நாம் இடையே கியூ-ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து நாட்டின் எந்த பகுதியிலும் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட இரு நாட்டு அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் அறிமுக விழா கம்போடியாவின் சீம் ரீப் மாகாணத்தில் நடைபெற்றது. இதில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். வியட்நாம் ஸ்டேட் வங்கி கவர்னர் நிகுயென் தி ஹாங் மற்றும் கம்போடிய தேசிய வங்கியின் கவர்னர் சியா செரே ஆகியோர் தலைமையில், பேமென்ட் லிங்க் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்த புதிய கட்டண முறையானது பாதுகாப்பானது மற்றும் வசதியானது எனவும், எல்லை தாண்டிய பணப்பரிமாற்றத்தை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் கரன்சியின் பயன்பாட்டையும் ஊக்குவிக்கிறது.
இந்த எல்லை தாண்டிய கியூஆர் கோடு கட்டண முறையானது வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் வியட்நாமில் கம்போடிய கரன்சியில் பொருட்களை வாங்குவதற்கும் பணம் செலுத்துவதற்கும் உதவுகிறது.
இதன் மூலம் இரு நாடுகள் இடையே எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வியட்நாம் தவிர தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளுடனும் இந்த டிஜிட்டல் பண பரிமாற்றம் தொடர்பான கியூஆர் கோடு லிங்கை கம்போடியா வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


