முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முதல்வராக நாளை பதவி ஏற்கிறார் ரேவந்த் ரெட்டி

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      இந்தியா
Revanth-Reddy 2023-12-05

Source: provided

ஐதராபாத் : தெலுங்கானா மாநில முதல்வராக நாளை ரேவந்த் ரெட்டி பதவியேற்பார் என கூறப்படுகிறது. 

தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 65 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரசின் வெற்றி வேட்பாளர்கள் பட்டியலுடன் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நேற்று முன்தினம் ஐதராபாத் தனியார் ஓட்டலில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மாணிக் தாகூர் எம்.பி. ஆகியோர் தலைமையில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 

இதில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்வு செய்யும் அதிகாரம் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முதல் அமைச்சரை அறிவிப்பார். இது தொடர்பாக டெல்லியில் உயர் மட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி அம்மாநில முதல்வராக தேர்வு செய்யப்படுகிறார். தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி நாளை 7-ம் தேதி பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. 

மேலும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, ஸ்ரீதர் பாபு ஆகியோர் துணை முதல்வர் பதவி கேட்டு வருகின்றனர்.அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும் உள்ளது. இதனால் 2 துணை முதல்வர்களை  நியமிக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசித்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து