முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக்கோப்பை இந்திய அணியில் பிஷ்னோய் இடம் பெற வேண்டும் : முன்னாள் வீர் முரளிதரன் விருப்பம்

செவ்வாய்க்கிழமை, 5 டிசம்பர் 2023      விளையாட்டு
Muthiah-Muralitharan 2023-0

Source: provided

பெங்களூரு : டி-20 உலக்கோப்பை இந்திய அணியில் பிஷ்னோய் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் வீர் முரளிதரன், கும்ளே, அஷ்வினை போல சிறப்பா செயல்படுவதாகவும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து தொடரில்... 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அசத்திய இவர், 2022, பிப் ல் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான 'டி-20' போட்டியில் அறிமுகம் ஆனார். இருப்பினு அணியில் போதிய இடம் கிடைக்காமல் தவித்தார் அயர்லாந்து தொடரில் சிறப்பாக செயல்பட்ட இவ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 'டி-20'யில் வாய்ப்பை பெற்றார்.

தொடர் நாயகன் விருது... 

விசாகப்பட்டனத்தில் நடந்த முதல் போட்டியில் 4 ஓவரில் 54 ரன் கொடுத்த இவர், பின் சிறப்பாக செயல்பட்ட 5 போட்டியில் 9 விக்கெட் சாய்த்து தொடர் நாயகன் ஆனார். தவிர, 2016ல் இலங்கைக்கு எதிராக அஷ்வின் (9 விக்.,) நிகழ்த்திய விக்கெட் வேட்டையை சமன் செய்தார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் உலக கோப்பை 'டி-20' வரவுள்ள நிலையில் இந்த செயல்பாடு, அணியில் நிலை இடத்தை தரும் என நம்புகிறார். 

இளம் தலைமுறை... 

இவர் குறித்து டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் சாய்த்த சுழல் ஜாம்பவான் இலங்கையின் முரளிதன் கூறியது., பொதுவாக இந்திய கிரிக்கெட் எப்போதும் சிறப்பாக செயல்படும். அடுத்தடுத்து சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கி கொண்டிருக்கும். முன்பு கும்ளே, அடுத்து அஷ்வின் வரிசையில் தற்போது இளம் தலைமுறை சுழற்பந்து வீச்சாளர்கள் வந்துள்ளனர். 

இந்திய அணியில்...

இதில் வழக்கமான 'லெக் ஸ்பின்' பவுலர்களில் இருந்து வித்தியாசமா காணப்படுகிறார் ரவி பிஷ்னோய். பந்தை வேகமாக வீசுகிறார், எங்கு, எப்படி வருகிறது என கணிப்பதற்குள் வந்து விடுகிறது. இவரை 'டி-20' உலக கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டும். அக்சர் படேல்பந்தை அதிகமாக சுழற்றவில்லை என்றாலும் துல்லியமாக வீசுகிறார். இவரைப் போலத் தான் வாஷிங்டன் சுந்தரும் துல்லியப வேகமாக பந்து வீசுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து