முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி சென்றார் ரஷ்ய அதிபர் புடின்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      உலகம்
Putin 2023-12-06

Source: provided

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் புடின் நேற்று சவுதி அரேபியா சென்றார். அங்கு சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 250 பேரை இஸ்ரேல் பகுதியில் இருந்து பணயக் கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்திச் சென்றனர். 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் மீது போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேலை நோக்கி ராக்கெட்டுகளை வீசி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதையடுத்து பல நாடுகள் இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்துவதற்காக முயற்சித்து வருகின்றன. 

இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு சென்றார்.  இந்த பயணத்தின்போது இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், கச்சா எண்ணெய் சந்தை, இரு நாட்டு உறவு குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. 

அதேவேளை, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யனையும் ரஷ்ய அதிபர் புதின் சந்திக்கிறார். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு புடின் ரஷ்யா செல்கிறார். 

இதனிடையே, ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி இன்று ரஷ்யா செல்ல உள்ளார். அங்கு அவர் அதிபர் புடினை சந்திக்கிறார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் உச்சமடைந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடின் - ஈரான் அதிபர் ரைசி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 11 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 12 hours ago
View all comments

வாசகர் கருத்து