முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை அங்கீகரிப்போம்: கொடி நாளில் பிரதமர் மோடி வேண்டுகோள்

வியாழக்கிழமை, 7 டிசம்பர் 2023      இந்தியா
Modi-2023-12-07

புதுடெல்லி, கொடிநாளில், நம் ராணுவ வீரர்களை அவர்களின் தைரியம், நம்பிக்கை, தியாகத்தை அங்கீகரிப்போம் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொடி நாள் நிதி வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் கடந்த 1949-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது. பனிமுகடுகள் உள்ள இமயமலை எல்லைகளையும். அடர்ந்த காடுகள் நிறைந்த வடகிழக்கு எல்லைப் பகுதிகளையும், பரந்த சமவெளியான வடமேற்கு எல்லைப் பகுதிகளையும், நீண்ட நெடிய கடல் பகுதிகளையும் காவல் காத்து, தாய்த் திருநாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் பேணிக் காத்திடுவது நமது சமூகக் கடமையாகும்.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் தினத்தையொட்டி நடக்கும் கொடி விற்பனை மூலமும், நன்கொடைகள் மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், அண்டை நாட்டு எதிரிகள் மற்றும் உள்நாட்டு தீவிரவாதிகளின் தாக்குதலில் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

ஒவ்வொரு மாநில நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட வாரியாக உள்ள அரசு அலுவலகங்களின் மூலம் கொடி நாள் நிதி திரட்டப்படுகின்றது. இந்த நிதி வசூலை இந்திய ஜனாதிபதி, பிரதமர், அந்தந்த மாநிலங்களின் கவர்னர்கள் ஆண்டுதோறும் துவக்கி வைப்பாளர்கள். பின்னர், மாவட்டங்கள் தோறும் திரட்டப்படும் நிதியானது மாநில அரசிடம் சேர்ப்பிக்கப்படும். மாநில அரசுகள் அனைத்தும் அந்தந்த ஆண்டுகளில் தாம் சேமித்த நிதியை பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய அளவிலான படை வீரர்கள் நலவாரியத்திடம் ஒப்படைக்கும்.

இந்நிலையில், டெல்லியில் நேற்று கொடிநாள் தினத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். கொடிநாளில், நம் ராணுவ வீரர்களை அவர்களின் தைரியம், நம்பிக்கை, தியாகத்தை அங்கீகரிப்போம். நம் தேசத்தை காப்பதில் அவையே ஒப்பற்றது. இந்தநாளில் ஆயுதப்படை வீரர்கள் கொடிநாள் நிதியை அளிக்கும்படி உங்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து