முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாரிப்பாளர் சங்கம் நடத்தவிருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா : ஜன. 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2023      சினிமா
Theater-Owners 2023-10-17

Source: provided

சென்னை : சினிமா தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வரும் 24-ம் தேதி நடத்தவிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்புதலும் பெறப்பட்டது.

அதன்படி தமிழ் சினிமா வளர்ச்சியில் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும்விதமாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு  விழா வரும் 24-ம் தேதி  பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 24-ம் தேதி நடைபெற இருந்த கருணாநிதி நூற்றாண்டு விழா  தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து