முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா பிறந்த நாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2023      இந்தியா
Modi CM 2023 04 05

Source: provided

புதுடெல்லி : சோனியா காந்தியின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கார்கே உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற இரு அவைகளின் குழு தலைவருமான சோனியா காந்தியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.  77 வயது முடிவடைந்து 78-வது வயதில் அவர் அடியெடுத்து வைத்துள்ளார். 

சோனியா காந்தியின் பிறந்த  நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், 

அர்ப்பணிப்புமிக்க பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக விளங்கும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் நீண்டகாலம் நல்ல உடல்நலத்துடன் திகழ விழைகிறேன்.

சோனியா காந்தியின் ஆழ்ந்த தொலைநோக்கும் அனுபவச் செல்வமும் எதேச்சாதிகார சக்திகளிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கும் நம் ஒன்றிணைந்த முயற்சிக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் தொடர்ந்து அமைந்திடட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

துணிச்சல், தன்னலமற்ற தியாகத்துடன் துன்பங்களை எதிர்த்து போராடும் குணம்  கொண்டவர் சோனியா. அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன் என காங்கிரஸ் தலைவர் கார்கே  தெரிவித்துள்ளார். இதே பல்வேறு அரசியல் தலைவர்களும் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து