எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்திருக்கும் நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் முதல் இரண்டு திட்டங்களை அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி இந்த திட்டங்கள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வர் மல்லு பாட்டீ விக்ரமர்கா, அமைச்சர்கள், தற்காலிக அவைத் தலைவராக இருக்கும் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ரேவந்த் ரெட்டி இரண்டு திட்டங்களையும் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கான உறுதிமொழியை சோனியா காந்தி நிறைவேற்றியது போல், 100 நாள்களுக்குள் 6 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்குப் பெயர் பெற்ற மாநிலமாக தெலங்கானாவை மாற்ற காங்கிரஸ் அரசு பாடுபடும் என்றார்.
டிசம்பர் 9 தெலங்கானாவுக்கு ஒரு பண்டிகை நாள். மக்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு தாயைப் போல் தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியது சோனியா காந்திதான் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, முதல் வாக்குறுதியாக, ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ சுகாதார திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவிக்கான சுகாதார காப்பீட்டைத் தொடங்கிவைத்தார். மகாலட்சுமி திட்டத்தின் கீழ், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணத்தையும் அவர் தொடங்கிவைத்தார். இன்று (நேற்று) முதல் இரண்டு திட்டங்களும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. மேலும் இந்நிகழ்ச்சியில், குத்துச்சண்டை வீரர் நிகத் ஜரீனுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2 கோடி காசோலையை ரேவந்த் ரெட்டி வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


