எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகரராவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ், தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்த போது வியாழக்கிழமை இரவு கழிப்பறையில் வழுக்கி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் செய்யப்பட்டதில், அவரது இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
அதற்கு உடனடியாக இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சந்திரசேகர் ராவுக்கு இடது இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் மருத்துவர்கள் செய்து முடித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு சந்திரசேகரராவ் நலமாக இருப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தெலுங்கானா முதல்வராக பதவியேற்றுள்ள ரேவந்த் ரெட்டி, மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவ்வின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சந்திரசேகர ராவ் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


