முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ள நிவாரண தொகையை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தி வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Edappadi 2020 11-16

Source: provided

சென்னை : வெள்ள நிவாரண தொகையை ரூ. 12 ஆயிரமாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க. அரசு முன்திட்டமிடாததாலும், முறையாக மழை நீர் வடிகால் பணிகளை செய்யாததன் காரணமாக, கடந்த வாரம் மிக்ஜாம் புயல் மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், நிவாரணத்தொகை என்று ஒரு சொற்ப தொகையை அரசு அறிவித்திருப்பது, பாதிக்கப்பட்ட மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 6 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று இந்த தி.மு.க. அரசு அறிவித்துள்ளது. மழை, வெள்ளத்தால் ஏழை, எளிய, தினசரி வேலைக்கு செல்லக்கூடியவர்கள், நடுத்தர மக்கள் இரண்டு வார காலம் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில், தங்களது 15 நாள் வருமானத்தை இழந்துள்ளதுடன், தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்துள்ளனர்.

எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையான ரூ. 6 ஆயிரம் என்பதை உயர்த்தி ரூ.12 ஆயிரமாக வழங்குவதுடன், எந்த நிபந்தனையும் விதிக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

மேலும் மழை வெள்ளத்தால் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ள  வாகனங்களுக்கு பகுதி வாரியாக சிறப்பு வாகன பழுது நீக்கும் முகாம்களை ஏற்பாடு செய்யவும், பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில்  அரசு போர்க்கால அடிப்படையில்  குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், கிருமிநாசினிகளைத் தெளித்து தொற்று நோய் பரவாமல் தடுக்க வேண்டும். 

சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கி வரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு   கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில் நுட்ப உதவியுடன் தூய்மைப்படுத்தும் பணியினையும் செய்து தர வலியுறுத்துகிறேன். 

சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்கவும்,   கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 17 ஆயிரம் வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து