முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளப் பெருக்கின்போது ஆவின் பால் தட்டுப்பாடா? - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      தமிழகம்
Mano-Thangaraj 2023 04 01

Source: provided

கன்னியாகுமரி : சென்னை வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால்  தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.  

கன்னியாகுமரியில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-

அம்பத்தூர், மாதவரம், அண்ணாநகர், அண்ணாநகர் கிழக்கு, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம், மயிலாப்பூர் ஆகிய ஆவின் மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுகிறது. சென்னை வெள்ளப்பெருக்கின் போது ஆவின் பால்  தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறுவதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது.

 நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது களத்தில் நின்று பணியாற்றினோம், ஆனால் இன்று குறை கூறுபவர்கள் யாரும் களத்தில் இல்லை. ச.ம.க. தலைவர் சரத்குமாருக்கு பா.ஜ.க.வுடன் இணையும் நோக்கம் உள்ளதால் தான் பிரதமர் மோடியால் இந்தியாவிற்கே பெருமை என்ற கருத்தை கூறி உள்ளார். 

ஆசியாவின் ஜோதி என்று உலக நாட்டு மக்களால்  போற்றப்பட்ட ஜவஹர்லால் நேரு, உலக சமாதானத்தை பற்றி பேசினார். பா.ஜ.க. அரசு உள்ளூர் சமாதானத்தை பற்றிக் கூட பேசவில்லை. மதத்தை மையப்படுத்தி வாக்கு வங்கியை ஒருங்கிணைக்கும் ஒருவரால் எப்படி ஆசிய ஜோதி போன்ற பட்டத்தை பெற முடியும். கொள்கை இல்லாத கட்சிகள் தான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும். கொள்கை உள்ள கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. இவ்வாறு அவர் கூறினார் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து