முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே பந்தில் 7 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலிய வீரர் மேட் ரென்ஷா

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2023      விளையாட்டு
Australia 2023-12-10

Source: provided

கான்பெரா : பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் வீரர் மேட் ரென்ஷா ஒரே பந்தில் 7 ரன்கள் சேர்த்து அரை சதத்தை கடந்தார்.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட பயிற்சி கிரிக்கெட் போட்டி கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதன் 3-வது நாளான்று ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியின் பேட்ஸ்மேன் மேட் ரென்ஷா ஒரே பந்தில் 7 ரன்கள் எடுத்து அரை சதத்தை எட்டினார். 

அப்ரார் அகமது வீசிய 78-வது ஓவரின் 5-வது பந்தை மேட் ரென்ஷா டீப் எக்ஸ்டிரா கவர் திசையை நோக்கி அடித்தார். பந்து பவுண்டரியை நோக்கி விரைந்த நிலையில் மிர் ஹம்ஸா நீண்ட தூரம் துரத்தி சென்று எல்லைக் கோட்டுக்கு அருகே விழுந்து பந்தை தடுத்தார். இதற்குள் மேட் ரென்ஷா 3 ரன்கள் ஓடினார்.

எல்லைக் கோட்டுக்கு அருகே இருந்து பந்தை மிர் ஹம்சா நான்-ஸ்டிரைக்கர் திசையை நோக்கி எறிந்தார். அப்போது அங்கு நின்றிருந்தமுன்னாள் கேப்டன் பாபர் அஸம் பந்தைசேகரித்த நிலையில் விக்கெட் கீப்பர் சர்ப்ராஸ் அகமதுவை நோக்கி வேகமாக எறிந்தார். அவர், பிடிக்கத் தவறபந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் ‘ஓவர்த்ரோ’ வகையில்மேட் ரென்ஷாவுக்கு கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது. இதன் வாயிலாக ஒரே பந்தில் 7 ரன்கள் கிடைக்கப்பெற்று அரை சதத்தை கடந்தார் மேட் ரென்ஷா. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து