முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      விளையாட்டு
Sanju-Samson

Source: provided

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்படி சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் துபே ஆகிய முன்னணி வீரர்களில் ஒருவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கேட்டதாக கூறப்பட்டது. 

ஆனால் ராஜஸ்தான் அணியின் கோரிக்கையை சென்னை அணி நிராகரித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பேச்சுவார்த்தை அத்தோடு முடிந்து விட்டதாக கருதப்பட்டது. அந்த சூழலில் தற்போது சிஎஸ்கே நிர்வாகம் சஞ்சு சாம்சனை வாங்க மீண்டும் ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி நட்சத்திர வீரர் ஒருவரை ராஜஸ்தானுக்கு கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது. 

_______________________________________________________________________________________________________

185 ரன்னில் சுருண்டது தமிழ்நாடு

ரஞ்சி டிராபி 2025-26 சீசன் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அணி எலைட் குரூப் 'ஏ'-வில் இடம் பிடித்துள்ளது. இந்த பிரிவில் 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. முதல் மூன்று போட்டிகளில் தமிழ்நாடு அணி ஒரு தோல்வி, இரண்டு டிரா மூலம் 4 புள்ளிகள் பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் 4ஆவது போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆந்திராவை எதிர்த்து விளையாடி வருகிறது. தொடக்க வீரர்களான விமல் குமார் (10), என். ஜெகதீசன் (19) விரைவாக ஆட்டமிழந்தனர்.

அதன்பின் விக்கெட்டுகள் தொடர்ந்து சரிய ஆரம்பித்தன. பி.சச்சின் 4 ரன்களிலும், பிரதோஷ் ரஞ்சன் பால் 8 ரன்னிலும், பாபா இந்திரஜித் 19 ரன்னிலும், அந்த்ரே சித்தார்த் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் 103 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. கடைசி விக்கெட்டுக்கு பி.வித்யூத் உடன் சந்தீப் வாரியர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. இதனால் தமிழக அணியின் ஸ்கோர் 150 ரன்னைக் கடந்தது. இறுதியாக 182 ரன்னில் தமிழ்நாடு அணி ஆல்அவுட் ஆனது. 

_______________________________________________________________________________________________________

ஸ்ரேயாஸ் புகைப்படம் வைரல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி (24 ரன்) அடித்த பந்தை இந்திய அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடிச் சென்று பாய்ந்து அருமையாக கேட்ச் செய்தார். அப்போது மைதானத்தில் விழுந்ததில் அவரது இடது விலாப்பகுதி பலமாக இடித்தது. வலியால் அவதிப்பட்ட அவர் உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

'ஸ்கேன்' பரிசோதனை மேற்கொண்ட போது, மண்ணீரலில் கீறல் ஏற்பட்டு, அதனால் ரத்தக்கசிவு உருவாகி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அணி டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் சிட்னியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) ஷ்ரேயாஸ் ஐயர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களிலேயே சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில், காயத்திருந்து குணமடைந்த பின்பு இந்திய வீரர் ஸ்ரேயஸின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

_______________________________________________________________________________________________________

100-வது விக்கெட்டை நோக்கி பும்ரா

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பிரிஸ் பேனில் நேற்று பிற்பகல் நடந்தது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா புதிய சாதனையை நோக்கி இருக்கிறார். அவர் நேற்று ஒரு விக்கெட்டை எடுத்தால் 100-வது விக்கெட்டை தொடுவார். 31 வயதான அவர் 79 ஆட்டத்தில் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார்.

100-வது விக்கெட்டை எடுக்கும் 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பும்ரா பெறுவார். அர்ஷ் தீப் சிங் 105 விக்கெட்டுடன் (67 போட்டி) முதல் இடத்தில் உள்ளார். பும்ரா இந்த தொடரில் 3 விக்கெட்டே எடுத்துள்ளார். சர்வதேச அளவில் 33 வீரர்கள் 100 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷீத்கான் 182 விக்கெட்டுடன் முதல் இடத்தில் உள்ளார். டிம் சவுத்தி (நியூசி லாந்து) 164 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், முஷ்டா பிசுர் ரகுமான் (வங்காள தேசம்) 155 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். ஆனால் நேற்று நடைபெற்ற போட்டி மழையால் ரத்தானதால் அவரின் சாதனை முயற்சி தள்ளிப்போனது.

_______________________________________________________________________________________________________

இந்தியாவை வீழ்த்தியது நேபாளம் 

ஹாங்காங் சிக்ஸ் சர்வதேச கிரிக்கெட் போட்டி அங்குள்ள மோங்காக் நகரில் நேற்று டங்கியது. 6 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் ஒரு அணியில் 6 வீரர்கள் அங்கம் வகிப்பார்கள். இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். இதில் ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் 3 ஆட்டங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக மட்டுமே வெற்றி கண்டுள்ளது. குவைத் மற்றும் யுஏஇ அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் நேபாளத்துடன் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஷித் கான் 55 ரன்கள் அடித்தார். பின்னர் 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெறும் 3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த நிலையில் 45 ரன்களில் ஆல் அவுட் ஆகி 92 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்தியா தரப்பில் பாரத் சிப்லி மற்றும் பிரியங்க் பஞ்சால் தலா 12 ரன்கள் அடித்தனர். நேபாளம் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளும், பாசிர் அகமது 2 விக்கெட்டுகளும், ரூபேஷ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது வென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து