முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு : ஐ.சி.சி. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சனிக்கிழமை, 8 நவம்பர் 2025      விளையாட்டு
ICC 2023 08 04

Source: provided

துபாய் : 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்க உள்ளதாக ஐ.சி.சி.  அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

தலா 6 அணிகள்... 

2028 ஒலிம்பிக் தொடர் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இந்த ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி சார்பில் தலா 6 அணிகள் பங்கேற்கும். இந்த 6 அணிகளும் புள்ளிகள் தரவரிசையில் பட்டியலில் இருந்து தேர்வாகும் என முதலில் தகவல் வெளியானது. தற்போது ஒரு கண்டத்திற்கு ஒரு அணி என்ற வகையில் 6 அணிகள் தேர்வு செய்ய ஐ.சி.சி. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

29 போட்டிகள்...

போட்டிகள் 2028-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதியில் இருந்து 29-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் அணி என மொத்தமாக 29 போட்டிகள் நடைபெறும். பெண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 12-ம் தேதி நடைபெறும். ஆண்களுக்கான பதக்கம் போட்டிகள் ஜூலை 29-ம் தேதி நடைபெறும். போட்டிகள் அனைத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பொமோனாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக 1900-ல் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்திருந்தது. அதில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து தங்கப்பதக்கம் வென்றது. அதன்பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் தடை செய்யப்பட்டது. 128 வருடங்கள் கழித்து மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து