முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2025      இந்தியா
modi

Source: provided

டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்டில் உள்ள தேவ் பூமி பல்கலைக்கழகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறுவதால் மாணவர்கள் கலந்துகொள்வார்களா என்கிற சந்தேகம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதுவும், பி.டெக் (கணினி) இரண்டாம் ஆண்டு மற்றும் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை குறிப்பிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மூத்த வழக்குரைஞரும், சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷண் 'மோடி மோடி' என்று சப்தமிட்டால் எத்தனை மதிப்பெண்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து