முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் தகவல்

வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2025      தமிழகம்      அரசியல்
RBUdhayakumar 2024-12-22

மதுரை, மெகா கூட்டணி குறித்து ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-

இன்றைக்கு ஆளும் மக்கள் விரோத தி.மு.க. அரசை பற்றி எதுவும் பேசாமல், தினந்தோறும் பத்திரிகையாளர் களை சந்தித்து தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கும் புரியவில்லை, அவருக்கும் புரியவில்லை. அவர் தொடங்கிய கட்சியை பற்றி பேசாமல், விஜயையும், தி.மு.க.வையும் தூக்கிப்பிடித்து பேசி வருகிறார். தற்போது வலிமையோடு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் அதி.மு.க. மீதும், எடப்பாடி பழனிசாமி மீதும் தினமும் அவதூறு பரப்புவதையே தினகரன் வேலையாக கொண்டிருக்கிறார்.

ஒரு கட்சி ஆரம்பித்தால், அதன் இலக்கு வானளவு வரை இருக்கும். நான் கட்சி ஆரம்பித்துள்ளேன், கவுன்சிலர் தான் ஆவேன்.. முதல்-அமைச்சர் ஆகமாட்டேன் என யாராவது ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பார்களா? மற்ற கட்சிகளை போல விஜய்யும் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொண்டர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்பதை தெரிவிக்கும் வகையில் தி.மு.க.வுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என சொல்லியிருக்கிறார்.

நீங்கள் அன்புமணி ராமதாசிடம், உங்களுக்கு யார் போட்டி என கேட்டால், தி.மு.க.தான் போட்டி என கூறுவார். தேமுதிகவிடம் இதே கேள்வியை கேட்டால், பிரேமலதா விஜயகந்த்தும் தங்களுக்கு தி.மு.க.வே போட்டி என கூறுவார். இவ்வாறு, தி.மு.க.தான் தங்களுக்கு போட்டி என கூறும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் தி.மு.க.வை வீழ்த்த முடியும் என நாங்கள் கூறுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும். நல்லதே சிந்திப்போம். நல்லதே நடக்கும். எடப்பாடி பழனிசாமி மெகா கூட்டணி அமைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து