முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சித்திரை திருவிழா: தஞ்சை பெரிய கோவிலில் பந்தக்கால் நடப்பட்டது

வியாழக்கிழமை, 8 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Tanjore-Temple-2024-02-08

தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டது. 

தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதுடன் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. பெரிய கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆண்டு தோறும் பெரிய கோவிலில் சித்திரை திருவிழா, சதயவிழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதில் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. 

ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி பெரியநாயகி அம்மன் சன்னதி வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதன் பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழில் தேவாரம், திருமுறைகள் பாடி பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர்கள் மாதவன், மணிகண்டன் மற்றும் சிவாச்சாரியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். 

சித்திரை திருவிழாவுக்கான கொடியேற்றம் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி ஏற்றப்படுகிறது. அன்றிலிருந்து தொடர்ந்து 18 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஏப்ரல் 18-ம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறுகிறது. 23-ம் தேதி கொடி இறக்கத்துடன் சித்திரை திருவிழா நிறைவுபெறும்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து