Idhayam Matrimony

திருப்பதியில் 16-ம் தேதி ரதசப்தமி விழா: ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் திருவீதி உலா

வெள்ளிக்கிழமை, 9 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Tirupati 2023-09-19

Source: provided

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனும் ரத சப்தமி விழா வருகிற 16-ம்  தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒரே நாளில்  7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி 4 மாட வீதிகளில் வண்ணம் தீட்டுதல், திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்துதல், பூங்காக்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை. சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

4 மாடவீதிகளில் ஏழுமலையான் உலா வரும் போது முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

வருகிற 16-ம் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் திருப்பதி, திருப்பதி மலை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து