முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு-19 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: 6-வது முறை கோப்பையை வெல்லுமா இந்திய அணி? - இன்று ஆஸ்திரேலியாவுடன் பலப்பரிட்சை

சனிக்கிழமை, 10 பெப்ரவரி 2024      விளையாட்டு
India 2023-11-24

Source: provided

கேப்டவுன் : 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது. இதில் இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

5 முறை கோப்பை...

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பகல் 1.30  மணிக்குத் தொடங்குகிறது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. இதுவரை இந்திய அணி 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றி 2-வது வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது. 

6-வது முறை...

சமபலமிக்க இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி 6-வது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது ஆஸ்திரேலிய அணி 4-வது முறை கோப்பையை வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சமபலத்துடன்... 

உதய் சஹாரன் தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. உதய் சஹாரன் 389 ரன்னும், முஷீர் கான் 338 ரன்னும், சச்சின் தாஸ் 294 ரன்னும் எடுத்து முதல் 3 இடங்களில் உள்ளனர். இதில் முஷீர் கான் 2 சதம் அடித்துள்ளார். பந்துவீச்சில் சவுமி குமார் பாண்டே 17 விக்கெட்டும், ரமன் திவாரி10 விக்கெட்டும் கைப்பற்றினர். ராஜ் லிம்பானி, முருகன் அபிஷேக் ஆகியோரும் பந்துவீச்சில் உள்ளனர். அதுபோல் ஆதர்ஷ் சிங், அர்ஷின் குல்கர்னி, பிரியன்ஷு மோலியா ஆகிய பேட்ஸ்மேன்களும் உள்ளனர்.

4-வது முறையாக...

ஆஸ்திரேலியா 3 முறை (1988, 2002, 2010) கோப்பையை வென்றுள்ளது. அந்த அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. ஹத் வெய்ப்ஜென் தலைமையிலான அந்த அணியும் பேட்டிங், பந்துவீச்சில் சம பலத்துடன் உள்ளது. அந்த அணியில் ஹாரி டிக்சன் 267 ரன்னும், ஹக் வெய்ப்ஜென் 256 ரன்னும் எடுத்துள்ளனர். பந்துவீச்சில் டாம் ஸ்ட்ரேக்கர், வீட்லேர் தலா 12 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.

2 முறை மோதி... 

இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தோல்வியைச் சந்திக்கவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முடிவு இல்லை. ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இதற்கு முன்பு இரண்டு முறை (2012, 2018) மோதியுள்ளன. இரண்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து