Idhayam Matrimony

குடும்பத்துடன் இன்று அயோத்தி செல்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால் - பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Kejriwal-Bhagwant 2024-02-1

Source: provided

புதுடெல்லி : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இன்று தரிசனம் செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், டெல்லி முதல்வரும்,  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினர் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோருடன் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் இன்று தரிசனம் செய்ய உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பிரான் பிரதிஷ்டை விழாவிற்கு முறையான அழைப்பு வரவில்லை என்று கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்ல விரும்புவதாகவும், சில நாட்கள் கழித்து  செல்ல விரும்புவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து