முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் திரிணாமுல் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்தார் மம்தா

ஞாயிற்றுக்கிழமை, 11 பெப்ரவரி 2024      இந்தியா
Mamata 2024-02-11

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்தில்  மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான 4 பேர் அடங்கிய திரிணாமுல் கட்சி வேட்பாளர் பட்டியலை மம்தா பானர்ஜி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் வருகிற 27-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

இது குறித்த அறிவிப்பில், வருகிற  27-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவைத் தேர்தல் (ராஜ்யசபா) தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்  அதிகாரப்பூர்வ  வேட்பாளர்களாக கீழ்க்கண்ட 4 பேர் போட்டியிடுகிறார்கள்.

பத்திரிக்கையாளர் சகாரிகாகோஸ், கட்சியின் தலைவர் சுஷ்மிதா தேவ், எம்.டி. நதிமுல்ஹக் மற்றும் மம்தா பாலா தாக்கூர் ஆகியோர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுதாக்கல் செய்வார்கள் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை  தெரிவித்துக் கொள்கிறோம்.

வேட்பாளர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நமது கட்சியின் சார்பில் ஒவ்வொரு இந்தியரின் உரிமை, பாரம்பரியத்தை காக்க அவர்கள் சிறப்பாக பணியாற்றட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து டுவிட்டர் பக்கத்திலும் கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து