முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் மாசி மக பெருந்திருவிழா துவக்கம்

வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Tenkasi-Kashi-Vishwanath-Te

தென்காசி, தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 11 நாட்கள் மாசி மக பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். 

இந்த ஆண்டிற்கான மாசி மக பெருவிழா நேற்று காலை சுவாமி சன்னதி கொடி மரத்தில் கொடி யேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.  முன்னதாக அதிகாலை கோவிலின் நடை திறக்கப்பட்டு கொடிப்பட்டம் ரத வீதி உலாவும், பின்னர் கொடி மரத்திற்கு 11 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மலர்களால் அலங்க ரிக்கப்பட்டு, வேத விற்பனர்கள் வேத மந்திரங்களை முழங்க கொடி மரத்திற்கு மகா தீபாரதனை நடத்தப்பட்டது.

விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான வருகிற 21-ம் தேதி நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும், 28-ம்  தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி ரத வீதி உலாவும் நடைபெறுகிறது. 

திருவிழாவின் முக்கிய நாளான வருகிற 23-ம் தேதி அன்று சுவாமி-அம்பாள் எழுந்தருள தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப் படிதாரர்கள் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து