முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி கோவில் நடை தினம் ஒரு மணி நேரம் மூடப்படும் : அறக்கட்டளை அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 பெப்ரவரி 2024      ஆன்மிகம்
Ayodhya-temple 2024-02-16

Source: provided

லக்னோ : அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா கடந்த ஜனவரி 22-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு தினசரி பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொதுதரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில் அயோத்தி ராமர் கோவில் தினமும் மதியம் ஒரு மணி நேரம் மூடப்படும் என ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது;-

குழந்தை ராமர் 5 வயது பாலகன் ஆவார். இவ்வளவு நேரம் விழித்திருப்பதால் ஏற்படும் அழுத்தத்தை அவரால் தாங்க முடியாது. எனவே குழந்தை ராமருக்கு ஓய்வு கொடுக்க, கோவிலின் கதவுகளை சிறிது நேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதன்படி தினந்தோறும் மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து