எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : வேளாண் பொருட்களுக்கு புவிசார் குறியீடுப் பெற ரூ.30 லடசம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு 2024-2025-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் ஏராளமான புதிய அறிவிப்புகள் மற்றும் துறை வாரியாக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதன்பின்னர் வரவு செலவு குறித்த விவரங்களையும் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்.
அதனைத்தொடர்ந்து நேற்று (பிப். 20) 2024-25-ம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவை கூட்டம் நேற்று (பிப். 19) காலை 10 மணிக்கு கூடியது. வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.
அப்போது அமைச்சரின் அறிவிப்பில், “புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருள்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு ஆகியன அதிகரிக்கும். எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 2024-2025-ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (ராணிப்பேட்டை), அய்யம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதி பாகற்காய் (கடலூர்), செஞ்சோளம்(சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருள்களுக்குப் புவிசார் குறியீடு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும். எனத் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |