எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின். சென்னையைச் சேர்ந்த அவர் இங்கிலாந்துக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டத்தில் கிராவ்லி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அஸ்வின் 500 விக்கெட் கைப்பற்றிய சாதனையை படைத்தார். 37 வயதான அஸ்வின் 98 டெஸ்டில் விளையாடி 501 விக்கெட் வீழ்த்தி உள்ளார். 34 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும் (இன்னிங்ஸ்), 8 தடவை 10 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார். இந்நிலையில், 500-க்கும், 501-வது விக்கெட்டுக்கும் இடையே அஸ்வினுக்கு நிறைய நடந்துவிட்டது என்று அவரது மனைவி பிரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது: ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் அஸ்வினின் 500-வது விக்கெட்டை எதிர்நோக்கி இருந்தோம். அது நிறைவேறாத நிலையில் விசாகப்பட்டினம் போட்டியிலும் 500-வது விக்கெட் கிடைக்கவில்லை. அதனால் 499 விக்கெட்டை வீட்டில் இனிப்பை பகிர்ந்து கொண்டாடினோம். 500-வது விக்கெட் அப்படியே அமைதியாக நடந்தது. 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது. அது எங்கள் வாழ்க்கையில் நீண்ட நெடிய 48 மணி நேரமாகும். 500 விக்கெட் வீழ்த்தியது அபாரமான சாதனையாகும். உங்களை (அஸ்வின்) நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உங்களை நாங்கள் நேசிக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.
_______________________________________
இங்கிலாந்து வீரர்களுக்கு அட்வைஸ்
ராஜ்கோட்டில் நடந்த 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பந்தாடியது. 'பாஸ்பால்' என்ற அதிரடியான பேட்டிங் அணுகுமுறைக்கு பிறகு இங்கிலாந்து சந்தித்த மிக மோசமான தோல்வி இதுதான். இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி பெற்ற மோசமான தோல்வி இதுதான். இந்த தோல்வி அவர்களின் 'பாஸ்பால்' யுக்தியின் விளைவை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து வீரர்கள் எல்லா நேரமும் ஆக்ரோஷமாக விளையாட முடியாது. வாய்ப்பு கிடைக்கும்போது அதிரடியாக விளையாடலாம். 'பாஸ்பால்' என்பது தாக்குதல் ஆட்டத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. ஆனால் இங்கு நெருக்கடியை திறம்பட கையாள்வதும் முக்கியம்.
3-வது நாளில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சுப்மன் கில் விளையாடிய விதத்தை பாருங்கள். 30 அல்லது 40 பந்துகள் எதிர்கொண்டு அழுத்தத்தை தணித்ததும் பந்தை பவுண்டரிக்கு விளாச ஆரம்பித்தனர். இதுதான் டெஸ்ட் கிரிக்கெட். இந்தியா மொத்தம் 228.5 ஓவர்களில் 875 ரன்கள் குவித்தது. இங்கு இந்தியாவின் பேட்டிங் சலிப்பை ஏற்படுத்தியது என்று யாரும் சொல்லமாட்டார்கள். இந்திய மண்ணில் எப்படி சிறப்பாக பேட்டிங் செய்வது என்பது குறித்து இங்கிலாந்து வீரர்கள் ஆலோசிக்க வேண்டும். இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்த விதம், குறிப்பாக ஜோ ரூட் தவறான ஷாட்டை அடித்து ஆட்டமிழந்தபோது எனது கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை' என்றார்.
_______________________________________
ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஜூலை மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டிக்கு இந்திய குதிரையேற்ற வீரர் அனுஷ் அகர்வாலா (24) தகுதி பெற்றுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் “ஒலிம்பிக்கில் விளையாடுவது என் வாழ்நாள் கனவாக இருந்தது. தற்போது பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வானது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார். ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில் இந்தியாவிற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இறுதி ஒத்திகை பயிற்சியில் இந்திய வீரர்கள் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை பொருத்து ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று இத்திய குதிரையேற்ற அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து போலந்து, நெதர்லாந்து, ஜெர்மணி மற்றும் பெல்ஜியமில் ஒத்திகை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை, பெற்றதன் பேரில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுஷ் அகர்வால் தேர்வு செய்யப்பட்டார். மேலும், இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய குதிரையேற்ற விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
_______________________________________
டி20 தொடரில் நேபாள அணி
2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரில் கலந்து கொள்ளும் 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி பிரிவு ஏ-ல் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகளும், பிரிவு பி-ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணிகளும், பிரிவு சி-ல் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், உகாண்டா, பாபுவா நியூ கினியா அணிகளும், பிரிவு டி-ல் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக நேபாள அணி இந்தியாவின் குஜராத் மற்றும் பரோடா அணிகளுக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் ஆட உள்ளது. 'நட்புக் கோப்பை' என அழைக்கப்படும் இந்த தொடர் மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
-
கொரோனா பரவலை முதலில் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை மேலும் நீட்டிப்பு
21 Sep 2025பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை பற்றி முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிய ஜனதா எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது : நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்
21 Sep 2025சென்னை : “அரசியலில் நிரந்தரமாக நண்பர்களும் கிடையாது, பகைவர்களும் கிடையாது. பா.ஜ.க. நிச்சயமாக எந்த உட்கட்சி பிரச்சினையிலும் தலையிடாது” என தமிழக பா.ஜ.க.
-
நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை: நடிகர் பார்த்திபன் பேச்சு
21 Sep 2025கோவை : நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை
21 Sep 2025நியூயார்க் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா