முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      தமிழகம்
mettur

Source: provided

மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 34,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

தமிழகம், கேரளா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்துக்கு முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கர்நாடகாவில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அங்குள்ள அணைகள் நிரம்பிய நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன் முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்திறப்பு காரணமாக, அணையின் நீர்மட்டம் குறைவதும், காவிரியில் நீர்வரத்து அதிகரிக்கும் போது, அணை மீண்டும் நிரம்புவதுமாக இருந்து வருகிறது.

நடப்பாண்டில் 2-வது முறையாக கடந்த ஜூலை 5 தேதியும், ஜூலை 20-ம் தேதி 3-வது முறையும், ஜூலை 25-ம் 4 முறையும், ஆகஸ்ட் 20-ம் தேதி 5-வது முறையாகவும், செப்டம்பர் 2-ம் தேதி 6வது முறையாகவும் மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைகிறது. இதனால், அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 20,000 கன அடியாகவும், இரவு 8 மணிக்கு 22,500 கன அடியாகவும், இரவு 11 மணிக்கு 34,000 கன அடியாக அதிகரித்து இருந்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து இருந்ததால், நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை 7-வது முறையாக எட்டியது. இதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி, நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, அபாய ஒலி எழுப்பி 16 கண் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. காவிரி ஆற்றில் விநாடிக்கு 30,500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,300 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 7,700 கனஅடியும் என மொத்தமாக காவிரியில் 34,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை நீர்வரத்து 34,000 கன அடியாவும், நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. ஒரே ஆண்டில், மேட்டூர் அணை முழு கொள்ளளவை 7 முறை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால், கரையோர பகுதியில் வருவாய்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து