முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஸ்வான் அதிரடி நீக்கம்: பாகிஸ்தான் அணிக்கு புதிய ஒருநாள் கேப்டன் நியமனம்

செவ்வாய்க்கிழமை, 21 அக்டோபர் 2025      விளையாட்டு
Pak 2024-08-21

Source: provided

லாகூர் : ஒருநாள் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ஷாகீன் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் (50 ஓவர்) போட்டிகளுக்கான புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி நியமிக்கபட்டுள்ளார். முகமது ரிஸ்வானிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஷாகீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. ரிஸ்வானை மாற்றி அப்ரிடியை கேப்டனாக நியமிக்கும் முடிவு, பாகிஸ்தான் அணியின் வெள்ளை பந்து (ஒருநாள் மற்றும் டி20) தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன், உயர் செயல்திறன் இயக்குனர் அகிப் ஜாவேத் மற்றும் இஸ்லாமாபாத்தில் நடந்த தேசிய தேர்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஷாகீன் அப்ரிடியின் பதவிக்காலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது. இவர் ஏற்கனவே பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து