முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை:யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      விளையாட்டு
21-Ram-53

Source: provided

துபாய்:ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இங்கிலாந்துக்கு...

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தை பிடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் தரவரிசை பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

2 இரட்டை சதம்... 

ராஜ்கோட்டில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது 2வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் உயர்ந்து 15 வது இடத்தைப் பிடித்தார்.

7-வது இடத்தில்... 

டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 15 இடங்களில் நான்கு இந்திய வீரர்கள் உள்ளனர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 752 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 731 புள்ளிகளுடன் 12வது இடத்திலும், ரிஷப் பந்த் 706 புள்ளிகளுடன் 14வது இடத்திலும் உள்ளனர். 893 புள்ளிகளுடன் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து