முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

17 நாட்களுக்கான ஐ.பி.எல். அட்டவணை வெளியீடு: சென்னை அணி முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது

வியாழக்கிழமை, 22 பெப்ரவரி 2024      விளையாட்டு
22-Ram-50

Source: provided

புதுடெல்லி:2024 ஐ.பி.எல். போட்டிக்கான முதல் 17 நாட்களுக்கான அட்டவணையை பி.சி.சி.ஐ. நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் முதல் போட்டி நடக்கிறது. முதல் போட்டியில் சென்னை- பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

17-வது சீசன் ஆரம்பம்...

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

17 நாட்களுக்கான... 

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. அதே நேரம் நாடாளுமன்ற தேர்தலும் இந்த ஆண்டு நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேதிகள் மாற்றியமைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஐ.பி.எல். தொடரின் அட்டவணை, நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 17 நாட்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

தேர்தல் காரணமாக... 

மக்களவைத் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

சி.எஸ்.கே.வின் போட்டிகள்:

1) மார்ச் 22 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக, சென்னை.

2) மார்ச் 26 - குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக, சென்னை.

3) மார்ச் 31 - டெல்லி கேப்பில்ஸுக்கு எதிராக, விசாகப்பட்டினம்.

4) ஏப்ரல் 5 - சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக, ஐதராபாத்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து