முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து அனைத்து தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 23 பெப்ரவரி 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை:பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து கட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். 

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில்,  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில்,  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குழு,  தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு.  தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு அமைத்து தேர்தல் பணிகளில் தொடங்கியுள்ளது தி.மு.க..

இதையடுத்து,  பாராளுமன்ற தேர்தல் பணி தொடர்பாக தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள்,  தொகுதி பார்வையாளர்களுடன் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.  காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க.வின் 72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள் மற்றும் முக்கியமான மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பு,  வேட்பாளர் தேர்வு,  கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து