முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி. முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆல் அவுட்: 2-ம் நாள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு இந்தியா 219 ரன்கள்

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      விளையாட்டு
Indian-players 2024-02-17

Source: provided

ராஞ்சி : இங்கிலாந்திற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். நேற்று 2-ம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது.

பேட்டிங் தேர்வு... 

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராவ்லியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர்.

ஜோ ரூட் அபராம்...

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் பேர்ஸ்டோ 38 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், போக்ஸ் 47 ரன், ஹார்ட்லி 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார்.

353 ரன்களுக்கு...

நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது முதல் சதம் இதுவாகும். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். இந்நிலையில் 2ம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ரோகித் சர்மா... 

இங்கிலாந்து தரப்பில் ரூட் 122 ரன், ராபின்சன் 58 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து சுப்மன் கில் களம் இறங்கினார். கில் - ஜெய்ஸ்வால் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் கில் 38 ரன்னில் அவுட் ஆனார். 

ஜெய்ஸ்வால்... 

இதையடுத்து ஒரு முனையில் ஜெய்வால் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. கில் அவுட்டான பின் களம் இறங்கிய படிதார் 17 ரன், ஜடேஜா 12 ரன், சர்பராஸ் கான் 14 ரன், அஷ்வின் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்த நிலையில் 73 ரன் எடுத்து அவுட் ஆனார். இதையடுத்து துருவ் ஜூரெல் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஜூரெல் 30 ரன், குல்தீப் யாதவ் 17 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

ஜெய்ஸ்வால் புதிய சாதனை

5 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில், 600 ரன்களை கடந்து இளம் வீரர் ஜெய்ஸ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலம் இச்சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் 7 இன்னிங்சில் விளையாடிய ஜெய்ஸ்வால் 618 ரன்கள் அடித்துள்ளார். இதில் 2 அரை சதம் மற்றும் 2 இரட்டை சதமும் அடங்கும். சுனில் கவாஸ்கர், திலிப் தர்தேசாய், ராகுல் டிராவிட் வீராட் கோலிக்கு அடுத்தபடியாக 5-வது இந்திய வீரராக இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து