முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாற்றுத்திறனாளி வீரருடன் சந்திப்பு

சனிக்கிழமை, 24 பெப்ரவரி 2024      விளையாட்டு
Aamir-Hussain 2023-02-24

Source: provided

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், வாகாமா கிராமம் பிஜ்பெஹாராவைச் சேர்ந்தவர் அமீர் உசேன் (வயது 34). இவர் ஒரு மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் தனது தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையில் பேட்டைப் பிடித்து பேட்டிங் செய்தும், கால்களை வைத்து பவுலிங் செய்தும் வருகிறார். தனது திறமையினால் தற்போது பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக அமீர் உசேன் உயர்ந்துள்ளார்.

இவர் தனது 8 வயதில் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இந்நிலையில், கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது. அவரைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். முன்னதாக பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என அமீர் கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசினார். மேலும் அவருக்கு பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

_____________________________________________

பின்ச் சாதனை முறியடிப்பு

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இவ்விரு அணிகள் இடையிலான கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல் 1 சிக்சர் அடித்தார். இந்த சிக்ஸ் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். 

அதாவது, சர்வதேச டி20 போட்டியில் அதிக சிக்சர் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் இந்த சாதனை பட்டியலில் ஆரோன் பின்ச் 125 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது 126 சிக்சர்களுடன் மேக்ஸ்வெல் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர், 113 சிக்சர்களுடன் 3வது இடத்திலும், வாட்சன் 83 சிக்சர்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர்.

_____________________________________________

இங்கி., வீரர்களுக்கு பாராட்டு

இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்நிலையில் நேற்றைய ஆட்டம் முடிந்த பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த சில நாட்கள் எங்களுக்கு நன்றாக அமைந்தது. இப்படி சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடவே நான் விரும்புகிறேன். பிட்ச் தொடர்ந்து மோசமடைவது போல் தெரிகிறது. 96 ரன்களில் இருந்த போது ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட்டை அடிக்கலாம் என்ற எண்ணம் என்னுடைய மனதிற்குள் வந்தது. ஆனால் கடந்த பிட்ச்களை விட ராஞ்சி பிட்ச்சில் பந்து தொடர்ந்து கீழே செல்கிறது. 

எங்களுடைய அணி வீரர்களுக்காக ரன்கள் அடிக்க விரும்பிய நான் இன்று அதை செய்ததால் மகிழ்ச்சியடைகிறேன். பென் ஸ்டோக்ஸ்க்கு தொடர்ந்து ஆலோசனை கொடுக்கிறேன். நான் கேப்டனாக இருந்த போதும் அதைத்தான் அவர் செய்தார். எங்களுடைய 2 ஸ்பின்னர்கள் சிறப்பாக செயல்படுவது இங்கிலாந்து கிரிக்கெட்டுக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. குறிப்பாக சோயப் பஷீர் பவுலிங்கை இதற்கு முன் பார்க்காவிட்டாலும் இத்தொடரில் அவர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நன்றாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

_____________________________________________

கடைசி பந்தில் சஜனா சிக்சர்

பெண்கள் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது.  பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிவெற்றியை நோக்கி பயணித்தது. கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்ட நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் (55 ரன்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த சஜனா (6 ரன்) கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கியடித்து மும்பைக்கு 'திரில்' வெற்றியை தேடித்தந்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்த வீராங்கனை சஜீவன் சஜனா குறித்த சுவாரஸ்யமான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றிக்கனியை மும்பைக்கு பரிசளித்த சஜனா, கேரளாவின் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர். இதனிடையே அருண்ராஜ் காமராஜ் இயக்கத்தில் வெளியான 'கனா' படத்தில் சஜனா நடித்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஐஸ்வர்யா ராஜேசின் நண்பர்களில் ஒருவராக கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த இவர், சிவகார்த்திகேயனுடனும் ஒரு சில காட்சிகளில் தோன்றியிருப்பார். இந்த தகவல்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

_____________________________________________

இறுதிப்போட்டியில் கச்சனாவ்

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று முன்தினம் நடந்தன. முதல் அரையிறுதியில் ரஷிய வீரர் கச்சனாவ், ஆஸ்திரேலிய வீரர் அலெக்சி பாப்ரியனுடன் மோதினார். இதில் கச்சனாவ் 7-6 (14-12), 6-2 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக், பிரெஞ்சு வீரர் மான்பில்சுடன் மோதினார். இதில் மென்சிக் 6-4, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினார்.

_____________________________________________

உயிரிழந்த கிரிக்கெட் வீரர்

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கே. ஹோஸ்சாலா. அவர் தற்போது கர்நாடக அணிக்காக விளையாடவில்லை. 34 வயதான அவர் வயது அடிப்படையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடி வந்தார். தெற்கு மண்டலம் ஐ.ஏ.-ஏ.டி. தொடரில் தமிழக அணிக்கெதிராக விளையாடினார். இந்த போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் சக வீரர்களுடன் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்தார்.

 

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். விளையாட்டு மைதானத்திலேயே வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் கர்நாடகப பிரீமியர் லீக்கில் ஷிவமோகா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். கேஎஸ்சிஏ மகாராஜா டி20 டிராபியலும் விளையாடியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து