முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டில் வெறுப்பு அதிகரிப்பதற்கு காரணம் அநீதி: ராகுல் காந்தி பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 25 பெப்ரவரி 2024      இந்தியா
Rahul-Gandhi-1 2023 04 03

Source: provided

ஆக்ரா : நாட்டில் வெறுப்பு அதிகரிப்பதற்கு காரணம் அநீதி. இந்தியாவில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி பேசினார். 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் மணிப்பூர் மாநிலத்தில் இருந்து யாத்திரை மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்காளம், பீகார் வழியாக உத்தரபிரதேசத்துக்குள் அவரது யாத்திரை நுழைந்துள்ளது.  

இந்த நிலையில் ஆக்ராவில் ராகுல்காந்தி பேசியதாவது:-பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி., மூலம் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள் இன்னும் தெருக்களில் அமர்ந்திருக்கிறார்கள். 

மக்களுக்கு உழைக்க வேண்டியது அரசின் கடமை. இதனை மக்கள் புரிந்து கொள்ளாவிட்டால் எந்த மாற்றமும் ஏற்படாது. உங்கள் சொந்த நலனைப் பற்றி சிந்திக்கத் துவங்குங்கள் என்பதை மட்டுமே நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். 

அக்னி பாத் திட்டத்தில் ராணுவத்தில் பணிபுரியும் இளைஞர்களின் நிதி நிலை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மோசமாக இருக்கும். இளைஞர்களுக்கு வேலை வழங்க விரும்பாததால், அரசு வேலை தேடுபவர்களின் நேரத்தை வீணடிப்பதே பா.ஜ.க. அரசின் நோக்கம். 

நாட்டில் வெறுப்பு அதிகரிப்பதற்கு காரணம் அநீதி. இந்தியாவில் ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிராக பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை துவங்கி உள்ளேன்.  வெறுப்பு மற்றும் வன்முறையை நீக்கி நாட்டை காப்பற்றுவதே எங்களது பயணத்தின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து