எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராஞ்சி : துருவ்-சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தால் ராஞ்சியில் நடந்த இங்கிலாந்திற்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.
307 ரன்களுக்கு...
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் சோயிப் பஷீர் 5 விக்கெட்டும், டாம் ஹார்ட்லீ 3 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
3-வது நாள் ஆட்டம்...
2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் சுழலில் 53.5 ஓவர்களில் 145 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணி கடைசி 35 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது கவனிக்கத்தக்கது. இந்திய தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 24 ரன்னுடனும் (27 பந்து, 4 பவுண்டரி), ஜெய்ஸ்வால் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
4-வது நாள் ஆட்டம்...
இந்நிலையில் 4-வது நாள் நேற்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜெய்ஸ்வால் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் அரை சதம் அடித்து அவுட் (55) ஆனார். அடுத்து வந்த பட்டிதார் 6 பந்துகளை சந்தித்து 0 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 4 ரன்னிலும் சர்ப்ராஸ் கான் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 120 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கில்- துருவ் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இங்கிலாந்து தரப்பில் பஷிர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
விராட் கோலி பாராட்டு
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஆம். எங்கள் இளம் அணிக்கு அற்புதமான தொடர் வெற்றி. துணிவு, உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சி ஆகியவற்றைக் காட்டியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 17 வெற்றிகள்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதன்ன் மூலம் உள்ளூரில் தொடர்ந்து இந்தியா வெற்றி பெறும் 17-வது டெஸ்ட் தொடராக அமைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2012-ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. அதன்பிறகு இந்திய அணி உள்ளூரில் விளையாடிய 17 தொடர்களில் எதிர்கொண்ட 50 போட்டிகளில் 39 போட்டிகளில் வென்று 17 தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


