முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய இளம் வீரர்களுக்கு கேப்டன் ரோகித் பாராட்டு

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

ராஞ்சி : முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில்....

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 104.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 353 ரன்கள் எடுத்தது. இதையத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 307 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா வெற்றி...

இதையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 53.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 145 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து இந்திய அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 192 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்த தொடர் உண்மையிலேயே ஒரு கடினமான தொடராக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்கொண்டோம்... 

முதல் நான்கு போட்டிகளின் முடிவில் நாங்கள் இந்த தொடரை கைப்பற்றி இருப்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. எங்களது அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருமே திறமையான வீரர்கள். இந்த தொடரில் சில சவால்களை நாங்கள் ஒவ்வொரு போட்டியிலுமே எதிர்கொண்டோம். இருப்பினும் தற்போது கிடைத்துள்ள முடிவுகளின் அடிப்படையில் நாங்கள் செயல்பட்ட விதம் திருப்தி அளிக்கிறது.

சிறப்பான ஆட்டத்தை... 

முன்னணி வீரர்கள் அணியில் இல்லாமல் இளம் வீரர்களுடன் இப்படி ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட அவர்கள் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகப்பெரிய சவால்களுக்கு இடையே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி உள்ளனர். எனக்கும் டிராவிட் பாய்க்கும் இளம் வீரர்களுக்கு சரியான சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. அந்த வகையில் இந்த தொடரில் இளம்வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். 

துருவ் ஜூரலுக்கு....

துருவ் ஜூரல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தாலும் அவர் முதல் இன்னிங்சில் விளையாடிய விதம் அவரது முதிர்ச்சியான செயல்பாட்டை வெளிக்காட்டியிருந்தது. அவரிடம் தெளிவான நல்ல ஷாட்டுகள் இருக்கின்றன. முதல் இன்னிங்சில் அவர் அடித்த 90 ரன்களே எங்களை இங்கிலாந்து அணியின் ஸ்கோருக்கு அருகில் அழைத்துச் சென்றது. அதேபோன்று இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சுப்மன் கில்லுடன் அமைத்த பாட்னர்ஷிப் மிகச் சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார். 

இலக்கை பிரித்தோம்: ஜூரெல்

துருவ் ஜூரெல் அளித்த பேட்டியில் கூறியதாவது, சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதற்குத் தகுந்தார் போல் நான் விளையாடுகிறேன். முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு ரன்கள் தேவைப்பட்டது. எனவே கடைசி வரை பேட்டிங் செய்தால் முக்கிய ரன்களை எடுக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதற்காக நான் போட்ட பார்ட்னர்ஷிப்பில் சேர்ந்து பேட்டிங் செய்தவர்களுக்கும் பாராட்டு கொடுக்க வேண்டும். பந்தை பார்த்து அடித்த நான் அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் கில்லுடன் நன்றாக பேசி விளையாடினேன். குறிப்பாக நாங்கள் இலக்கை 10 ரன்கள் கொண்ட செட்டாக பிரித்து அதை துரத்துவதற்கான பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து