முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியல்: 2-வது இடத்தில் நீடிக்கும் இந்தியா

திங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2024      விளையாட்டு
Indian-players 2024-02-17

Source: provided

துபாய் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்திலேய நீடிக்கிறது. 

அதே இடத்தில்...

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு பின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த வெற்றிக்கு முன் 59.52 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 64.58 % பெற்று அதே 2வது இடத்தில் நீடிக்கிற்து.

நியூசிலாந்து அணி...

முதல் இடத்தில் (75%) நியூசிலாந்து அணி உள்ளது. இதையடுத்து 3 முதல் 9 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (55%), வங்காளதேசம் (50%), பாகிஸ்தான் (36.66%), வெஸ்ட் இண்டீஸ் (33.33%), தென் ஆப்பிரிக்கா (25%), இங்கிலாந்து (19.44%), இலங்கை (0%) உள்ளிட்ட அணிகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து