முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம்: முதல் தர கிரிக்கெட்டில் மும்பை வீரர்கள் சாதனை

செவ்வாய்க்கிழமை, 27 பெப்ரவரி 2024      விளையாட்டு
Mumbai 2023-02-27

Source: provided

மும்பை : கடைசி பேட்ஸ்மேன்கள் இருவரும் சதம் அடித்ததன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் மும்பை வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

348 ரன்களில்... 

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷிர் கான் 203 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த பரோடா 348 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சொலங்கி, ராவத் ஆகியோர் சதம் அடித்தனர். 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்ங்சியை ஆடிய மும்பை அணி 569 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

புதிய சாதனை...

ஒரு கட்டத்தில் மும்பை அணி 337 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனுஷ் கோட்யான்- துஷார் தேஷ்பாண்டே ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். இதன் மூலம் இந்த ஜோடி புதிய வரலாற்று சாதனையை படைத்து. 78 ஆண்டு கால முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 10-வது மற்றும் 11-வது பேட்டர் இருவரும் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். தனுஷ் 120 (நாட் அவுட்) ரன்களுடன் தேஷ்பாண்டே 123 (அவுட்) ரன்களும் குவித்தனர். இதன் மூலம் பரோடா அணிக்கு 606 ரன்கள் இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து