Idhayam Matrimony

பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்த ஹைட்ரஜன் மூலம் இயங்கும் பயணிகள் கப்பலின் சிறப்புகள்

புதன்கிழமை, 28 பெப்ரவரி 2024      தமிழகம்
PM-Modi-2-2024-02-28

தூத்துக்குடி, பல்வேறு சிறபம்சங்களை கொண்ட ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்தியாவின் முதல் பயணிகள் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி,  நாட்டிற்கு நேற்று அர்ப்பணித்தார். 

தூத்துக்குடியில் சுமார் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,  பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அதில் ஒன்று ஹைட்ரஜனால் இயங்கக் கூடிய பயணிகள் கப்பல்.  நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  ஹைட்ரஜனால் இயங்கும் பயணிகள் கப்பல் விரைவில் காசியில் ஓடும் என்று அறிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த ஹைட்ரஜனால் இயங்கும் அந்த கப்பலின் சிறப்புகள் வருமாறு., இந்த கப்பல் இந்தியாவிலே ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் முதல் கப்பல் ஆகும். இது முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்தியாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளமான கொச்சியில் இந்த கப்பல் கட்டப்பட்டது. மத்திய அரசின் ஹரீத் நௌகா என அழைக்கப்படும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துக்கான பசுமை மாற்றம் வழிகாட்டுதலின்படி இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 17 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் இந்த கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் நீர்வழிப் போக்குவரத்தில் பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கும் முதல் முயற்சி இதுவாகும். இந்த கப்பலில் 50 பேர் வரை பயணிக்கலாம். ஹைட்ரஜன் கப்பலின் மொத்த திட்ட மதிப்பீட்டில்  75 சதவீத பங்கை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. ஹைட்ரஜனால் இயங்கும் இந்த கப்பல் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும். மாசு அளவை குறைப்பதில் பெரும்பாங்காற்றும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 7 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 7 hours ago
View all comments

வாசகர் கருத்து