எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தர்மசாலா : இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் மார்ச் 7-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது.
இந்தியா முன்னிலை...
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்தன. இதன் முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணியும் அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 7-ந் தேதி தொடங்குகிறது.
கேஎல் ராகுல், பும்ரா...
இந்நிலையில் 5-வது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து 2 முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு பேட்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் கேஎல் ராகுல், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.ஏற்கனவே இருவரும் 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காயத்திற்கு சிகிச்சை...
முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆடிய ராகுல் காயம் காரணமாக அதன் பின்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. 4வது டெஸ்ட் போட்டியில் ராகுல் ஆடுவார் என தகவல் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் அவர் இடம் பெறமாட்டார் என பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. இந்நிலையில் ராகுலுக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை செய்ய அவரை லண்டனுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அவர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


